2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 9200-க்கும் மேற்பட்ட வார்த்தைகளாகும். இதில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை டிஜிட்டல் என்பதே. இந்த வார்த்தையை அவர் மொத்தம் 34 முறை பயன்படுத்தியுள்ளார்.

அதை தொடர்ந்து Capital என்ற வார்த்தையை 33 முறையும் Tax என்ற வார்த்தையை 28 முறையும் Infrastructure என்ற வார்த்தையை 28 முறையும் Investment என்ற வார்த்தையை 28 முறையும் பயன்படுத்தியுள்ளார். 20 முறை Customs என்ற வார்த்தையும் 19 முறை Urban என்ற வார்த்தையையும் 18 முறை Energy என்ற வார்த்தையையும் 17 முறை Health என்ற வார்த்தையையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது பட்ஜெட் உரையில் பயன்படுத்தினார் 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் வரையில் Digital என்ற வார்த்தை ஆறு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக Tax என்ற வார்த்தையை தான் நிர்மலா சீதாராமன் அவர்கள் 46 முறை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.