
தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிட மதிப்பு கூட்டு இயந்திரங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்த விடைப் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்றால் அந்த விளைபொருள்களை நன்கு சுத்தம் செய்து மதிப்பு கூட்டுவது அவசியமாகும்.
சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் தரும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு முன் வருவதில்லை. அதனால் பல்வேறு மதிப்பு கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளிடம் பிரபலப்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டில் வேளாண் நிதி அறிக்கையில் சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர வேளாண் விலை பொருள்களை தரம் பிரித்து மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தி அதிக லாபம் பெறும் விதமாக 292 மதிப்பு கூட்டம் இயந்திரங்களை விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் மதிப்பு கூட்டும் இயந்திரங்களுக்கு 40% மானியம் அல்லது ஒவ்வொரு இயந்திரத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புத்தொகை ஆகியவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது