தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே நிறைவேற்றி காட்டியுள்ளது தவாட்சி அரசு. இதன் ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் 3 சிலிண்டர்களுக்கான மானியத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் திட்டத்தை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், சிலிண்டருக்கு வழங்கவிருந்த நூறு ரூபாய் மானிய வாக்குறுதியைக் கூட நிறைவேற்றத் தவறிய கடந்த கால ஆட்சியாளர்கள், தவாட்சி அரசு எவ்வாறு குறுகிய காலத்தில் வாக்குறுதிகளைச் செயல்படுத்தி வருகிறது என்பதைப் பார்த்துப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கருத்துக்கள் எழுந்துள்ளன.

“>

 

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையிலான இந்த அதிரடித் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, ஆளுங்கட்சியின் இந்தச் செயல் அரசியல் களத்தில் புதிய விவாதத்தையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.