சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் அதிரடியாகக் குறைந்துள்ளது தங்கம் வாங்குவோரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, காலை நேரத்திலேயே சவரனுக்கு ரூ.560 வரை குறைந்திருந்த தங்கம், மாலையானதும் மேலும் அதிரடியாகக் குறைந்திருக்கிறது.
இதன் காரணமாக, ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக ஒரு சவரன் தங்கத்திற்கு ரூ.2,280 வரை விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாகக் காணப்பட்ட இந்த விலை வீழ்ச்சியால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,800-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,725-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடரும் இந்த விலை குறைவு சாமானிய மக்களின் நீண்ட நாள் நகை வாங்கும் கனவை நனவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
