மத நம்பிக்கை காரணமாகத் தலைமுடி மற்றும் மீசை வளர்க்கும் விசாரணை கைதிகளை, முடியை வெட்டுமாறோ அல்லது மீசையை அகற்றுமாறோ சிறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

​தமிழ்நாடு சிறை விதிகளின்படி, சிறைவாசிகளின் தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றைச் சுகாதார நிமித்தமாக ஒழுங்குபடுத்தச் சிறைத்துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இதனால் எவ்விதமான சுகாதாரப் பாதிப்பும் ஏற்படாத வரை, மத நம்பிக்கை கொண்ட கைதிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

​சிறைவாசிகளின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள இந்த முக்கிய உத்தரவு, வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

​விசாரணை கைதிகளின் தலைமுடி மற்றும் மீசை அகற்றும் கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்த நீதிமன்றத் தீர்ப்பு, தற்போது சோசியல் மீடியாவிலும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்திலும் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் பெற்றுள்ளது.