நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்து வரும் 103 தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கவும், அவர்களுக்கான அனைத்து நிவாரணப் பணிகளையும் மிக வேகமாக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிரடி மற்றும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் முதற்கட்டமாக, டெல்லியில் உள்ள மத்திய அரசு மற்றும் நேபாள தூதரக அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகிய 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் முகாம் அடித்துச் செயல்படவுள்ள இந்த அமைச்சர்கள் குழு, பாதிக்கப்பட்ட தமிழர்களை விரைவாக மீட்கும் பணிகளைக் கண்காணிக்கும்.
அதேபோல, நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவுக்கே நேரடியாகச் சென்று மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஒருங்கிணைக்கும் வகையில், ஆஷிஷ் குமார் ஐஏஎஸ் தலைமையிலான மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை நேபாளத்திற்கு உடனடியாக அனுப்பவும் முதலமைச்சர் விஜய் உத்தர பிறப்பித்துள்ளார்.
மாநில எல்லைகளையும் கடந்து, டெல்லி மற்றும் நேபாளத் தலைநகர் காத்மாண்டு ஆகிய இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தமிழக அரசின் உயர் மட்டக் குழுவை இறக்கி 103 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்பதற்கு முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த வேகமான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் பாராட்டைப் பெற்றுள்ளது.
