தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தன் கணக்கில் போதுமான பணம் இருந்தும் அவசரத் தேவைக்காக ₹50,000 பணத்தை எடுக்கச் சென்ற வாடிக்கையாளரை வங்கி மேலாளர் தடுத்து அவமதித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணக்கில் போதிய இருப்பு இருப்பதை உறுதி செய்துவிட்டு, அதற்குரிய காசோலையுடன் சென்ற அந்த நபர், தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணத்தை வழங்குமாறு மேலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், வாடிக்கையாளரின் நியாயமான கோரிக்கையைக் காதுகொடுத்துக் கேட்க மறுத்த வங்கி மேலாளர், அவரை அவதூறாகப் பேசி வங்கியிலிருந்து வெளியேறுமாறு மிரட்டியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கணக்கில் போதுமான பணமும் முறையான ஆவணங்களும் இருந்தும் வங்கிகள் வாடிக்கையாளர்களை இவ்வாறு அலைக்கழிப்பதும், உரிய சேவை வழங்காமல் துரத்துவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
HDFC Bank manager refuses to withdraw ₹50,000 for a customer.
A man went to the bank to withdraw money for his mother’s treatment, but he was reportedly denied the withdrawal.
The customer repeatedly explained that he had a cheque for ₹50,000 and sufficient balance in his… pic.twitter.com/xK6u9K7IbI
— Anshika (@IM_Anshi21) August 24, 2026
“>
வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படும் இதுபோன்ற வங்கி அதிகாரிகளின் மீதும், தொடர்புடைய HDFC வங்கி நிர்வாகம் உடனடியாகத் தகுந்த விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையேயும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
