உணவு டெலிவரி செயலி மூலம் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த உணவை, டெலிவரி செய்யும் நபர் அவரே உட்கொண்டுவிட்டு, ஆர்டர் வெற்றிகரமாக வழங்கப்பட்டுவிட்டதாகப் பொய்யாகக் குறிப்பிட்டுவிட்டுத் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஏற்கனவே பணம் செலுத்தி ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட இந்த ஏமாற்று வேலை முற்றிலும் கண்டனத்திற்குரியது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் உண்மையாக இருப்பின், சம்மந்தப்பட்ட டெலிவரி ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வாடிக்கையாளருக்கான பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. உணவு டெலிவரி என்ற பெயரில் இதுபோன்று நிகழும் முறைகேடுகள் ஒட்டுமொத்த டெலிவரி சேவைகளின் நம்பகத்தன்மை மீதும் பெரும் சந்தேகங்களை எழுப்புகின்றன.

“>

 

சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு உரிய நீதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.