வீட்டின் அழகை அதிகரிப்பதற்கும், இயற்கையான காற்றை சுவாசிப்பதற்கும் நாம் பலவிதமான செடி கொடிகளை ஆசையோடு வளர்க்கிறோம். ஆனால், நாம் அறியாமல் ஆசையாக வளர்க்கும் சில மரங்களும் செடிகளும் பாம்புகளுக்கு மிகவும் பிடித்தமான வாழிடமாக அமைந்துவிடுகின்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு அதிர்ச்சித் தகவலாகும்.
குளிர்ந்த சூழலையும், அடர்த்தியான நிழலையும் விரும்பும் பாம்புகள், இத்தகைய தாவரங்கள் இருக்கும் இடத்தைத் தேடிவந்து தங்களின் நிரந்தர இருப்பிடமாகவே மாற்றிக்கொள்கின்றன. குறிப்பாக, அடர்த்தியான கிளைகளையும் அதிக நிழலையும் தரும் மரங்கள் மற்றும் நறுமணம் வீசும் சில குறிப்பிட்ட மலர்ச் செடிகள் பாம்புகளை அதிகளவில் ஈர்க்கின்றன.
இந்நிலையில் பாம்புகள் தங்களின் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும், பிற விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்த அடர்ந்த தாவரங்களை மறைவிடமாகப் பயன்படுத்துகின்றன. இத்தாவரங்களின் அடர்த்தி காரணமாக சுண்டெலிகள், தவளைகள் மற்றும் பறவைகள் போன்ற பாம்புகளின் உணவு ஆதாரங்களும் அங்கு அதிகமாக நடமாடுவதால், பாம்புகள் இந்த இடத்தை விட்டு நகர மறுத்து அங்கேயே தங்கத் தொடங்குகின்றன.
எனவே, வீட்டின் தோட்டம் அல்லது சுற்றப்புறங்களில் செடிகளை வளர்க்கும்போது அவற்றின் தன்மையை அறிந்து செயல்படுவது மிகவும் அவசியமாகும். அதிக அடர்த்தியாக வளரும் செடிகளை அவ்வப்போது வெட்டிப் பராமரிப்பதும், வீட்டின் சுவர்களுக்கு மிக அருகில் பாம்புகளை ஈர்க்கக்கூடிய தாவரங்களை வளர்ப்பதைத் தவிர்ப்பதும் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.
