பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாத ஊதியத்தின் அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.

​6-வது ஊதியக்குழு விகிதத்தில் கடைசியாக ஊதியம் பெற்ற ஊழியர்களுக்கு, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் அகவிலைப்படி (DAT) 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ​இந்தச் சூழ்நிலையில்தான், பயனாளிகள் அனைவருக்கும் ஒரே சீராகப் பயன்பெறும் வகையில் இடைக்கால மாத ஊதியத்தின் அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

​தமிழக அரசின் இந்த அறிவிப்பால் CPS திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் பெரும் பயனடைவார்கள் என்பதுடன், அவர்களின் மாதாந்திர ஊதியத் தொகையும் கணிசமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.