உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு வெளியே, திவ்யா மிஸ்ரா என்ற பெண் தனது கணவர் மனஸ் வாஜ்பாயால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்கள், கணவனின் சித்ரவதை காரணமாக கடந்த ஒரு ஆண்டாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சம்பவத்தன்று வங்கிக்கு வெளியே மனைவியைச் சந்தித்துப் பேசிய மனஸ், திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றார்.மனைவியைச் சுட்ட பிறகு வீட்டிற்குத் திரும்பிய மனஸ், அங்கு மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த தனது சொந்தச் சகோதரி சிவா வாஜ்பாயையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

தொடர்ந்து சில நிமிடங்களிலேயே தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பாக, “என்னை ஏமாற்றிய மனைவியையும், என் சகோதரியையும் கொன்றுவிட்டேன்” என வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டு இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.கொல்லப்பட்ட திவ்யாவின் சகோதரியும் பிரபல யூடியூபருமான பிரக்யா மிஸ்ரா, மனஸ் ஒரு கடுமையான மனநோயாளி எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய தக்காளி அழுகியிருந்தால் கூட திவ்யாவைக் கொடூரமாக அடிப்பான் என்றும், திருமணமான முதல் நாளிலேயே வீட்டுச் செலவுகளைப் பிரித்துக் கொள்ளும்படி வற்புறுத்தினான் என்றும் கூறினார். இவனது கொடுமை தாளாமலேயே திவ்யா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

கொடூரமான இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த மனஸ், அவசரமாக அனுமன்சாலிசா மந்திரத்தை ஓதியதாக அண்டை வீட்டார்கள். அதன் பின்னரே அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சாதாரண வங்கி ஊழியரான மனசுக்கு மூன்று கைத்துப்பாக்கிகள் எப்படி கிடைத்தன என்றும், அவருக்குக் கார் ஓட்டக்கூடத் தெரியாது என்பதால் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்றும் பிரக்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

“>

தொடர் மன அழுத்தம் மற்றும் சித்ரவதை காரணமாக சில நாட்களுக்கு முன்புதான் திவ்யாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு கைகால்களில் முறிவு ஏற்பட்டது, அவ்வளவு துன்பங்களை அனுபவித்த தன் கணவன் திருந்திவிட மாட்டானா என்ற நம்பிக்கையிலேயே அவர் வாழ்ந்து வந்ததாகவும் பிரக்யா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.