உத்தரப்பிரதேசம், அரித்துவார் பகுதியில் விலங்குகளின் விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் வியக்கத்தக்க சம்பவம் அரங்கேறியுள்ளது. தெருவில் செல்லும் அப்பாவி மனிதரைக் காப்பாற்றத் தன் உயிரையும் துச்சமென மதித்து சண்டையிட்ட ஒரு நாயின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது  ஃபேருபூர் பகுதியில், ஒரு நபர் தன் வீட்டின் வெளியே வழக்கம்போல் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வெறிநாய் திடீரென்று அந்த மனிதர் மீது பாய்ந்து கடிக்க முயன்றது. என்ன நடக்கிறது என்று அந்த மனிதர் சுதாரிப்பதற்குள் அந்தப் பயங்கரமான நாய் அவரைத் தாக்கத் தயாரானது.

 

 

View this post on Instagram

 

A post shared by Prime News (@primenewsnetwork.in)

ஆனால், அதே நேரத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும் மற்றொரு நாய் உடனடியாகச் செயலாற்றியது. பாதிக்கப்பட்ட அந்த மனிதர் மீது சொந்தப் பாசம் காட்டிய அந்தத் தெருநாய், உடனே குறுக்கிட்டுத் தாக்குதலுக்கு வந்த நாயுடன் கடுமையாகச் சண்டையிடத் தொடங்கியது. இரண்டு நாய்களுக்கும் இடையே நடந்த இந்தத் தீவிர மோதலில், மனிதர் மீது எந்தக் காயமும் படாமல் அந்த நாய் பாதுகாத்தது.

சிறப்பு என்னவென்றால், அந்த நாய் அந்த மனிதரின் சொந்தப் பாத்துக்காப்பு நாய் அல்ல; அது அந்தத் தெருவில் வசிக்கும் ஒரு சாதாரணத் தெருநாய் மட்டுமே. அந்த மனிதர் தினமும் அந்த நாய்க்குத் தவறாமல் உணவு அளித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் வேறு எந்த விதமான முறையான பந்தமும் கிடையாது.

ஆனால், தனக்குத் தினமும் சோறிட்ட மனிதனுக்கு ஒரு ஆபத்து வந்தபோது, சற்றும் யோசிக்காமல் அந்த நாய் ஒரு கேடயமாக நின்று காப்பாற்றியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விடியோ சில நொடிகளே ஓடினாலும், மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான தூய்மையான நம்பிக்கையை உலகிற்கு உணர்த்தியுள்ளது.