உத்தரப் பிரதேச மாநிலம் கிரெய்டோ வெஸ்ட் பகுதியில் உள்ள ஹெரிடேஜ் ஹோம்ஸ் சொசைட்டியில், மின்தடை காரணமாக மின்தூக்கியில் ஏற்பட்ட கோளாறால் 5 வயது சிறுமி ஒருவர் வேலைக்காரப் பெண்ணுடன் மாட்டிக்கொண்டு அவதிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்தடை ஏற்பட்டதை அடுத்து, வீட்டின் வேலைப் பெண்ணுடன் சிறுமி லிப்டில் சென்றபோது திடீரென நின்றது. உள்ளே கடுமையான புழுக்கமும், வெளிச்சமற்ற இருளும் சூழ்ந்ததால் அச்சமடைந்த அந்தப் பச்சிளம் குழந்தை சத்தம்போட்டு அழுதுள்ளது. லிப்டில் உள்ள அலாரம் அடிக்கப்பட்ட போதிலும் நீண்ட நேரமாகப் பராமரிப்புத் தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. வெளியே நின்றுகொண்டு உள்ளேயிருந்து தனது மகளின் அழுகுரலைக் கேட்ட தாய், செய்வதறியாமல் கதறித் துடித்த காட்சிகள் காண்போரை உருக்கமடையச் செய்தது.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு லிப்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சிறுமி மீட்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான அச்சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையைக் கண்ட பெற்றோர், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
अंधेरी लिफ्ट में फंसी 5 साल की मासूम बच्ची… बाहर मां सिर्फ उसकी आवाज सुनकर रो रो कर बुरा हाल।
ग्रेनो वेस्ट हेरिटेज होम्स सोसाइटी में बिजली जाने के बाद बच्ची मेड के साथ लिफ्ट में फंस गई। अंदर अंधेरा और गर्मी। मासूम रो रही थी। अलार्म बजाया गया, लेकिन काफी देर तक कोई मदद नहीं… pic.twitter.com/zXKiqTqiRj
— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 12, 2026
“>
சமூக வளாகங்களில் உள்ள லிப்டுகளின் முறையற்ற பராமரிப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுக்களின் தாமதம் குறித்து குடியிருப்பாளர்கள் மத்தியில் மீண்டும் கடும் கண்டனங்களும் அச்சமும் எழுந்துள்ளது.
