தமிழ்நாடு மற்றும் ஜப்பான் இடையேயான தொழில்துறை மற்றும் வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பானின் எஹிமே மாகாணத்தைச் சேர்ந்த உயர் மட்டக் குழுவினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். துணை ஆளுநர் நோரியுகி கன் தலைமையில் வந்த இந்த அதிகாரப்பூர்வ குழுவினரை அமைச்சர் கீர்த்தனா சந்தித்து முக்கியமான விவாதங்களை நடத்தியுள்ளார்.

ஜப்பானின்ஷிகோகு தீவில் அமைந்துள்ள எஹிமே மாகாணத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், இரு பிராந்தியங்களுக்கு இடையேயான பரஸ்பர முதலீடுகள் மற்றும் புதிய தொழில் ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற கப்பல் கட்டும் தொழில்துறை, சுவையான மிகான் ஆரஞ்சு பழங்கள் மற்றும் ஜப்பானின் மிகப்பழமையான வெந்நீர் ஊற்றுகளில் ஒன்றான ‘டோகோ ஒன்சென்’ புகழ்பெற்ற ஸ்டுடியோ கிப்லி அனிமேஷன் படங்களுக்கு ஊக்கமளித்த இடம் போன்ற சிறப்புகளைக் கொண்டது எஹிமே மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பின் மூலம் தமிழகத்தில் ஜப்பானிய முதலீடுகள் பெருகுவதற்கும், பல்வேறு துறைகளில் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் நிகழ்வதற்கும் புதிய வாசல்கள் திறக்கப்பட்டுள்ளன.

“>

 

‘மேக் இன் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு தொடர்ந்து எடுத்துவரும் தீவிர முயற்சிகளுக்கு இந்தச் சந்திப்பு மேலும் வலுசேர்த்துள்ளது.