சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் நேற்று விலை குறைந்திருந்தது. இந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,545 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 10 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 260000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
