ஜென்-ஸி தலைமுறையினரின் போராட்டங்கள் வெறும் அரசியல் எதிர்ப்புகளைத் தாண்டி, சமூகக் கட்டமைப்பிலும் நிறுவனங்களிலும் நிலவும் முறைகேடுகளுக்கு எதிரான ஒரு புரட்சியாக உருவெடுத்துள்ளன.
தேர்வுகளில் நேர்மை, தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து போராடும் இவர்கள், தங்களுக்குள் எந்தவித அச்சத்தையும் அனுமதிக்க மறுக்கிறார்கள்.
அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை எதிர்ப்பதுடன், தங்களின் எதிர்காலத்தைப் பறிக்கும் தற்போதைய சமூகச் சூழலையும் இவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். முந்தைய தலைமுறையினர் அமைதியாக அனுசரித்துச் செல்வதையே பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழியென நம்பினர்.
வேலைவாய்ப்புகளைப் பெறவும் வாழ்வில் முன்னேறவும் தங்களின் சொந்தத் தொழில்களில் கவனம் செலுத்துவதே போதும் என்றும், பேராட்டங்களைத் தவிர்ப்பதே முதிர்ச்சியான நிலைப்பாடு என்றும் அவர்கள் கருதினர்.
ஆனால், தற்போதைய சூழலில் வேலைவாய்ப்புகளும் நியாயமான தேர்வு முறைகளும் சிதைந்துவிட்ட நிலையில், அந்த இணக்கமான அரசியல் பயனற்றதாகிவிட்டது என்பதை ஜென்-ஸி இளைஞர்கள் ஆழமாக உணர்ந்துள்ளனர்.
அரசியல்வாதிகள் எளிதான இலக்குகளாகத் தெரிந்தாலும், நமது கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு முந்தைய தலைமுறையினர் காட்டிய மௌனமும் சமரசங்களுமே காரணம் என்ற உண்மையை இந்தப் போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தங்களது அன்றாடப் பணிகளில் நேர்மையாக இருக்க வேண்டியவர்கள் பதவிக்கும் சுயநலனுக்காகவும் செய்த சிறுசிறு விட்டுக் கொடுத்தல்களே இன்று சமூகத்தை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளன.
பெற்றோர்களின் தார்மீக உலகத்திற்கும் அமைதியான சமரசங்களுக்கும் எதிரான ஒரு அமைதியான கிளர்ச்சியாகவே இவர்களின் போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன.
ஜென் ஸி போராட்டங்கள் பல்வேறு வழிகளில் புரட்சிகரமானவை. முதல் வகை உளவியல் ரீதியானது: அச்சத்தை ஒரு சமூக நெறியாக ஏற்றுக்கொள்ள மறுப்பதாகும். அந்த அச்சத்தின் ஒரு பகுதி, மோடி அரசாங்கத்தில் அதிகரித்து வரும் ஒரு சர்வாதிகாரப் போக்கினால் தூண்டப்பட்டது.#genzprotesthttps://t.co/bRUoDWmmfE
— Indian Express Tamil (@IeTamil) August 9, 2026
“>
அரசியல் மாற்றங்களால் மட்டுமே எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியாது என்பதை உணர்ந்துள்ள இவர்களின் கேள்விகள், முந்தைய தலைமுறையினர் செய்த தவறுகளையும் சமரசங்களையும் சுயபரிசோதனை செய்யத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதே இந்தப் போராட்டங்களின் உண்மையான புரட்சிகரமான பரிமாணாமாகும்.
