நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளைத் திரித்து, ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

அதிகாரப்பூர்வத் தரவுகள் கையில் இருக்கும் போதும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவது முறையல்ல என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ தரவுப் பட்டியலின்படி, தொழில்துறை மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு நாடு முழுவதும் மூன்றாவது இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் பகிரப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை மறைத்துவிட்டுத் தவறான பிம்பத்தை உருவாக்க முயல்வது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் கைதேர்ந்த சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் இதுதான் நடக்கும் என்றும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற அரசியல் யுக்திகளைத் தலைவர்கள் கைவிட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“>

 

அரசியல் லாபத்திற்காக மாநிலத்தின் வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பும் போக்குக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.