தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு குடும்ப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா அவர்கள் தங்களது திருமண பந்தத்தில் இருந்து விலகுவதற்காகச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விவாகரத்து மனுவானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது குறித்த அடுத்தக்கட்ட நகர்வுகள் தற்போது சூடுபிடித்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக நாளை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளதாகத் தகவலள் வெளியாகி உள்ளன.

பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறிவரும் இந்த விவகாரம் குறித்த நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த விசாரணையின் போது நீதிபதி என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் ஊடகத் வட்டாரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது.