சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் மீது பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இருக்கும் இடத்தில் கடுமையான கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று காட்டுத்தீ போல பரவியது. ஜென் இசட் தலைமுறை குறித்தான தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் அண்மையில் பேசப்பட்ட நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்னா ரனாவத்தைத்தான் இப்படி பொதுமக்கள் அடித்து நொறுக்குகிறார்கள் என்று கூறி பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
ஆனால், இணையத்தில் தீயாகப் பரவி வரும் இந்தத் தகவல்களில் கொஞ்சமும் உண்மையில்லை என்று விசாரணையில் உறுதியாகியுள்ளது. உண்மையில், அந்த வைரல் வீடியோவில் அடி வாங்குவது நடிகை கங்னா ரனாவத் கிடையாது, மாறாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் நெட்டிசனான பிரணயிட்டா தாஸ் என்பவர் ஆவார். கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த வன்முறை மற்றும் தள்ளுமுள்ளு காட்சிகளே இந்த வீடியோவின் உண்மையான பின்னணியாகும்.
प्रिय @KanganaTeam जी जब जनता के बीच निकलोगी तो जनता ऐसे ही कुटाई करेगी तुम्हारी…#kangana pic.twitter.com/wWVK5EHrYI
— Abhishek Yadav (@abhisheky350) August 2, 2026
தேர்தல் வன்முறை வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்தபோது, அங்கு திரண்டிருந்த பாஜக ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டதோடு, அவருக்கு எதிராகக் கடுமையான தள்ளுமுள்ளும் அரங்கேறியது. இந்தச் சம்பவத்திற்கும் நடிகை கங்னா ரனாவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதுடன், வன்முறையைத் தூண்டும் நோக்கில் பரப்பப்படும் இந்தத் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று ஊடகத் தரப்புகள் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளன.
