புதிய கல்வியாண்டு தொடங்கும்போதே மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது பள்ளி விடுமுறை பட்டியல்தான். அந்த வகையில், வரவிருக்கும் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த தகவல் வெளியாகி, மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வியாண்டில் முக்கியப் பண்டிகைகள் பலவும் வார இறுதி நாட்களை ஒட்டி வருவதால், பண்டிகைக் கொண்டாட்டங்கள் இரட்டிப்பாகியுள்ளன.

​குறிப்பாக, 2026-27 கல்வியாண்டில் கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் 4), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25), ஆங்கிலப் புத்தாண்டு (ஜனவரி 1, 2027), பொங்கல் (ஜனவரி 15, 2027) மற்றும் புனித வெள்ளி (மார்ச் 26, 2027) ஆகிய ஆறு முக்கிய அரசுப் பொது விடுமுறைகளும் சரியாக வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன. ஒரே கல்வியாண்டில் ஆறு முக்கிய விடுமுறைகள் வெள்ளிக்கிழமையில் அமைவது மிகவும் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

​இப்படி வெள்ளிக்கிழமைகளில் அரசு விடுமுறை வருவதால், அதைத் தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்துத் தொடர்ந்து 3 நாட்கள் நீண்ட வார இறுதி விடுமுறை (Long Weekend) கிடைக்கவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வரவும், குடும்பத்தினருடன் பண்டிகைகளை மனநிறைவோடு கொண்டாடவும் போதுமான நேரம் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

​ஒரே ஆண்டில் 6 முறை இப்படித் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லை இல்லாத மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் தொடர் விடுமுறைப் பட்டியல் தற்போது சமூக வலைதளங்களிலும் மாணவர்களாலும் அதிக அளவில் பகிரப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது.