தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் தங்களது சினிமா பயணத்தைத் தாண்டி, தீவிர அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதுடன், மக்கள் சேவையை நோக்கித் தங்களது பாதையைத் திருப்பியுள்ளதாக பகிரங்கமாக அறிவித்து வருவது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பதிவில், “மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்… இனிமேல் நம்முடைய பாதை சாதாரண பாதை இல்லை; நேர் பாதை…” என்று குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஏற்கனவே நடிகர்கள் லாரன்ஸ், தனுஷ் மற்றும் விஷால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பொதுப் பணிகளிலும் அரசியல் நகர்வுகளிலும் ஆர்வம் காட்டி வருவதால், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த தேர்தல்களின் களம் முற்றிலும் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“>

 

சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டல் செய்வது போல, வரும் காலங்களில் தேர்தல் ஓட்டு இயந்திரத்தில் உள்ள வேட்பாளர்களின் புகைப்படப் பட்டியலை சினிமா தியேட்டர் டிக்கெட் புக் செய்யும் செயலிகளைப் போல நடிகர்களின் படங்களைக் கொண்டே நிரப்பும் அளவுக்கு சினிமா மற்றும் அரசியல் கலவை உச்சத்தை எட்டப் போகிறது என்றே தோன்றுகிறது.