பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் வகையில் மார்க்கண்டேயன் மிகவும் மனஉறுதியுடனும் தைரியத்துடனும் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்த அவர், ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்பி தங்களை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களைக் கைது செய்வதை மட்டுமே தற்போதைய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ஜனநாயக முறைகளுக்கு மாறாகச் சட்டமன்ற உறுப்பினர்களைப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கும் குதிரை பேர வேலையை மட்டுமே இந்த அரசு முழு நேரமாகச் செய்து வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசின் இதுபோன்ற மிரட்டல்களுக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
