முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் எண்ட் கிரெடிட் காட்சிகளின் போது திரையரங்கில் அரங்கேறிய உணர்ச்சிகரமான தருணங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
படம் முடிந்து திரையில் ‘ப்ரியமுடன் விஜய்’ என்ற வாசகத்துடன் எண்ட் கிரெடிட் காட்சிகள் ஓடும்போது, திரையரங்கில் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்த பல திரைப்பிரபலங்களும் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘பிரியமுடன் விஜய்’💔Jana Nayagan End Credit Scene பார்த்து தேம்பி அழுத பிரபலங்கள்🥺 pic.twitter.com/ri7Hy2ijAs
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) July 23, 2026
“>
விஜய்யின் திரைப்பயணம் மற்றும் அக்காட்சிகள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாகத் தியேட்டரிலேயே பிரபலங்கள் கண் கலங்கிய நிகழ்வு தற்போது இந்த நெகிழ்ச்சியான வீடியோ கிளிப்கள் எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
