நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
அதிகார அடக்குமுறைக்கு எதிராக எந்தத் திசையில் இருந்து குரல் ஒலித்தாலும் அதற்குத் தன் கலையின் மூலம் வலிமை சேர்ப்பேன் என்று அவர் குறிப்பிட்டிருந்ததே இந்த விவாதத்திற்குக் காரணமாகும்.
மாரி செல்வராஜின் பதிவும், வெடித்த சர்ச்சையும்:
நீட் முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவப்போக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இணையத்தில் எழுந்தக் கேள்விகள்:
மாரி செல்வராஜின் இந்தப் பதிவிற்குப் பின் பலரும் அவரை நோக்கிச் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, “அதிகாரத்தில் இருப்போரின் ஆணவத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதே கலைஞனின் நேர்மை என்றால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் தேர்வை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சியில் இருந்தபோது அதை மறந்தவர்களின் வாசலில் உங்கள் குரல் ஏன் ஒலிக்கவில்லை?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இயக்குனர் @mari_selvaraj
அதிகாரத்தில் இருப்போரின் ஆணவத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதே கலைஞனின் நேர்மை என்றால்,
ஆட்சிக்கு வருவதற்கு முன் “நீட் ஒழிப்போம்” என்று வாக்குறுதி கொடுத்து, ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது அந்த வாக்குறுதியை மறந்தவர்களின் வாசலில் உங்கள் குரல் ஏன்… https://t.co/AWpIHq3jam
— Vivek Rangasamy (@VivekRangasamy) July 23, 2026
“>
மேலும், “அதிகாரம் மாறியவுடன் மட்டுமே அதிகார அடக்குமுறைக்கு எதிரான உங்கள் கலையின் நேர்மை விழித்தெழுகிறதா? எல்லாத் திசைகளிலும் ஒலிக்க வேண்டிய குரல், ஒரு குறிப்பிட்ட வசதியான திசையில் மட்டும் ஒலித்தால் அது கலைக்கான நேர்மையல்ல, மாறாக அரசியலுக்கான நடிப்பு” என்று கடுமையாக விமர்சித்து வருவது தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
