உத்தரபிரதேசத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்றில், நபர் ஒருவர் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, வங்கி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கடும் வெயில் மற்றும் புழுக்கத்திலிருந்து தப்பிக்க, அந்த நபர் ஏடிஎம் மையத்தின் ஏசி குளிர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு, சாவகாசமாகத் தரையில் படுத்து உறங்கியது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், அங்கு ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு தர்மசங்கடத்திற்கு உள்ளாகினர். இந்த விசித்திரமான காட்சியை வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த நபர் யார், எவ்வளவு நேரமாக அங்கே இருந்தார் என்பது குறித்த எந்தத் தகவலும் தெரியவில்லை.
வங்கி வளாகத்திற்கு நேர் எதிரே பள்ளி இருந்தும், அங்கு ஒரு காவலாளி கூட இல்லாதது வங்கியின் அஜாக்கிரதையை உறுதிப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்துப் பேசிய காவல் அதிகாரி, “ஏடிஎம் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க வங்கி நிர்வாகத்தின் பொறுப்பு. அவர்கள்தான் உரிய பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்,” என்று கையை விரித்துவிட்டார்.
उमस भरी गर्मी से बचने के लिए एक शख्स SBI (भारतीय स्टेट बैंक) के ATM केबिन को ही आशियाना बना लिया। गर्मी ज्यादा थी, घर में AC था नहीं लिहाजा भाई साहब लेट लिए ATM के वातानुकूलित केबिन में। ये तस्वीर यूपी के जिला मऊ की है। pic.twitter.com/18cL5QEmuL
— Shahnawaz(News24) (@Shahnawazreport) July 17, 2026
“>
ஆர்பிஐ விதிகளின்படி, ஏடிஎம் மையங்கள் வங்கிப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அங்குத் தங்குவது அங்கீகரிக்கப்படாத செயல் என்றும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் மூலம் மின்னணு கண்காணிப்பு அமைப்பின் தோல்வி அம்பலமாகியுள்ளது.
ஏடிஎம் இயந்திரங்களைச் சிலர் வேரோடு பிடுங்கிச் செல்லும் இக்காலகட்டத்தில், வங்கியின் இந்த மெத்தனப் போக்கு பெரும் விபரீதத்திற்கு வழிவகுக்கலாம் என மக்கள் எச்சரிக்கின்றனர்.
