மும்பை ‘கேட்வே ஆஃப் இந்தியா’ கடல் பகுதியில், அலைகளுக்கு இடையே நபர் ஒருவர் பேக் பிளிப்  அடித்து குதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிருக்கு ஆபத்தான இந்த ஸ்டண்ட் செயலைப் பார்த்த நெட்டிசன்கள், இது வெறும் மலிவான விளம்பர உத்தி என்று விமர்சித்து அந்த நபரை கடுமையாகத் திட்டி வந்தனர். ஆனால், அந்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை தற்போது வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nazim Shaikh (@nazimaquaman)

அந்த நபர் ஸ்டண்ட் செய்பவர் அல்ல, மாறாக கடலில் மூழ்கும் பலரது உயிரைக் காக்கும் ஒரு திறமையான ‘லைப் கார்ட்;  ஆவார். நாஜிம் ஷேக்  என்ற அந்த வீரர், கடந்த 16 ஆண்டுகளாக சுமார் 300-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

தான் எவ்வித விளம்பரத்திற்காகவும் இவ்வாறு செய்யவில்லை என்றும், கடலில் யாராவது ஆபத்தில் சிக்கினால் அவர்களை மீட்கவே தான் இத்தகைய சாகசங்களில் ஈடுபடுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இவருடைய இந்த உன்னதமான சேவையை உள்ளூர் காவல்துறையினரும் அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உண்மையை அறிந்த நெட்டிசன்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து, இப்போது அந்த நபரை ‘ரியல் லைஃப் ஹீரோ’ என்று கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஒரு விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு விமர்சிப்பது எவ்வளவு தவறானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.