சிறு குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாகும். ஒரு நொடி நம் கவனம் சிதறினாலும், அது நம் கண்மணிகளின் உயிருக்கே ஆபத்தாய் வந்து முடிந்துவிடும் என்பதற்கு இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவமே சான்றாகும்.
பெற்றோர்களின் அசாத்திய அலட்சியத்தால் ஒரு பச்சிளம் குழந்தை காரின் விண்டோ கண்ணாடியில் கழுத்து நசுங்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ள திடுக்கிடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெற்றோர்களைக் குலைநடுங்க வைத்துள்ளது. குடும்பம் ஒன்று தங்களது காரில் குழந்தையுடன் வெளியே சென்றுள்ளது.
வழியில் கார் கழுவும் நிலையம் ஒன்றிற்குச் சென்ற அவர்கள், காரை அங்கே நிறுத்திவிட்டு கார் கண்ணாடிகளைத் தானியங்கி முறையில் மூடத் தொடங்கியுள்ளனர். அப்போது, காரின் பின் இருக்கையில் இருந்த பச்சிளம் குழந்தை விளையாட்டாகத் தனது தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டியுள்ளது. இதனைச் சற்றும் கவனிக்காத பெற்றோர்கள் அசட்டுத் துணிச்சலாகக் கண்ணாடியை முழுமையாக ஏற்றிவிட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் விண்டோ கண்ணாடி ஏறியதில், அந்தக் குழந்தையின் கழுத்து கண்ணாடியின் விளிம்பில் மிகக் கொடூரமாக நசுங்கி மாட்டிக்கொண்டது.
கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, அந்தக் குழந்தையால் அலறவோ அல்லது அழவோ கூட முடியாமல் மூச்சுத் திணறி துடிதுடித்துள்ளது. ஜன்னலை ஏற்றிவிட்டுப் பெற்றோர்கள் சாதாரணமாக இருக்க, சில விநாடிகளுக்குக் குழந்தையின் இந்தத் தவிப்பு யாருக்கும் தெரியாமலேயே போயுள்ளது. நல்ல வேளையாக, காரைக் கழுவ வந்த ஊழியர் ஒருவர் குழந்தையின் நிலையைப் பார்த்துவிட்டு அலறல் சத்தம் போட, பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த குடும்பத்தினர் உடனடியாகக் கண்ணாடியை இறக்கி, குழந்தையை மீட்டெடுத்தனர்.
おい!😰
何してんねん…!! pic.twitter.com/xNWmaxykPz— 猫報道 (@5chmatme) July 15, 2026
“>
கழுத்து விடுவிக்கப்பட்ட பிறகே அந்தக் குழந்தை பயத்தில் அலறி அழுதுள்ளது. ஒரு சில நொடிகள் தாமதித்திருந்தாலும், மூச்சுத் திணறி அந்தக் குழந்தையின் உயிர் பிரிந்திருக்கும் என்ற இக்கட்டான சூழலில், இந்தத் திடுக்கிடும் வீடியோ பெற்றோர்களிடையே பெரும் விழிப்புணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
