நியூயார்க்கில் உள்ள ஒரு உணவகத்தில், ஊழியர் ஒருவர் பீட்சா மாவு பிசையும் இயந்திரத்தின் மீது தனது வெறும் காலை வைத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நபர் ஒருவர், அந்த உணவகத்திற்கு ஒரு துண்டு பீட்சா வாங்கச் சென்றபோது இந்த அருவருப்பான சம்பவத்தை நேரில் கண்டுள்ளார். உடனடியாக அதைத் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், உணவக ஊழியர் சுகாதார விதிமுறைகளை முற்றிலுமாக மீறி, பீட்சா தயாரிக்கும் பெரிய மாவு கலவை இயந்திரத்தின் விளிம்பில் வெறும் காலுடன் ஏறி நிற்பது தெளிவாகத் தெரிகிறது.

“>

உணவை அவர்கள் காலால் மிதிப்பதை நான் பார்த்தேன் என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையவாசிகளிடையே கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் சாப்பிடும் உணவைத் தயாரிக்கும் இடத்தில் இவ்வளவு அலட்சியமாகவும் அசுத்தமாகவும் நடந்து கொள்வதா என்று பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தற்போதைய உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் குறித்த பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுகள் எந்த அளவிற்குப் பாதுகாப்பானவை என்ற அச்சத்தை இது நுகர்வோர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.