விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி பகுதியில் வர்ஷா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கும் அவருடைய உறவினரான யுவராஜ் என்ற வாலிபருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் வர்ஷா திடீரென அந்த வாலிபரை திருமணம் செய்ய மறுத்து விட்டதார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற யுவராஜா திடீரென இளம் பெண்ணின் வீட்டிற்குள் சென்று அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

என்னுடைய மகள் தாக்கப்படுவதைக் கண்டு அலறி துடித்து அவரது தாயார் தடுப்பதற்காக ஓடி வந்தார். ஆனால் வெறி கொண்ட அந்த வாலிபர் பெண்ணின் தாயான விநாயக ஜோதியை சம்பவ இடத்திலேயே துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்தார். ‌ தற்போது பலத்த காயங்களுடன் வர்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தாயின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய யுவராஜா பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் தானாகவே சென்று சரணடைந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.