மகாராஷ்டிரா மாநிலத்தில் டிடர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து சுமார் 2.3 கோடி லிட்டர் போலியான பால் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
உணவில் கலக்கக்கூடாத ஆபத்தான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த விஷப் பாலைப் பொதுமக்கள் பருகினால், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வளவு பெரிய அளவில் விஷப் பால் விநியோகம் செய்யப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான போலீஸ் விசாரணையில் பால் கலப்படக் கும்பலின் கொடூரமான முகத்திரை கிழிந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து கூடுதல் தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இத்தகைய ஆபத்தான கலப்படப் பால் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
