இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆபத்தான வீரரான ஜோஸ் பட்லரை வீழ்த்தும் முயற்சியில் பஞ்சாப் அணியைச் சேர்ந்த சக வீரர்களான சுப்மன் கில் மற்றும் குர்னூர் பிரார் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Gurnoor Brar completes the catch to send Jos Buttler back 🚶➡️
Watch the 1st ODI of #ENGvIND, LIVE NOW on Sony Sports Network TV channels.#SonySportsNetwork #MamlaPersonalHai #ExtraaaInnings pic.twitter.com/W2lmSrbZE4
— Sony Sports Network (@SonySportsNetwk) July 14, 2026
பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் பட்லர் அடித்த பந்து அந்தரத்தில் பறக்க, அதைப்பிடிக்க கில் மற்றும் பிரார் இருவரும் ஒரே நேரத்தில் ஓடி வந்தனர். இருவரும் மிக நெருக்கமாக வந்து மோதிக்கொண்டாலும், அந்தப் பந்தை பிரார் லாவகமாகப் பிடித்து பட்லரை வெளியேற்றினார்.
இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்தது. இந்தப் முக்கிய விக்கெட் இந்திய அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது, அதன் பிறகு இங்கிலாந்து அணி வெறும் 19 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. இந்த வீரர்களின் துணிச்சலான செயல்பாட்டை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
