இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் நுணுக்கமான ஆலோசனையால் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியது. சமீபத்தில் நடந்த டி20 தொடரில் அபாரமாக விளையாடி இந்தியாவிற்குத் தலைவலியாக இருந்த ஹாரி புரூக், தற்போது மீண்டும் களமிறங்கியபோது, அவரை வீழ்த்த ரோகித் சர்மா ஒரு மாஸ்டர் பிளான் போட்டார்.
தற்போது சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டாலும், களத்தில் ரோகித் சர்மாவின் அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
Milestone moment for #JaspritBumrah 💪
The Boom marks his much-awaited return by dismissing Harry Brook to claim his 150th ODI wicket! 🎯💥#ENGvIND 1st ODI 👉 Streaming LIVE on JioHotstar! pic.twitter.com/CCBxJyGKAn
— Star Sports (@StarSportsIndia) July 14, 2026
ஹாரி புரூக் பேட்டிங் செய்ய வந்தவுடன், உடனடியாக ஜஸ்பிரித் பும்ராவை மீண்டும் பந்துவீச அழைக்கும்படி சுப்மன் கில்லுக்கு ரோகித் சர்மா அறிவுறுத்தினார்.
அவரது இந்தச் சரியான வியூகத்தின் பலனாக, புரூக்கின் விக்கெட்டை இந்தியா மிக எளிதாகக் கைப்பற்றியது. விக்கெட் வீழ்ந்தவுடன், ரோகித் சர்மா மைதானத்தில் இருந்த தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நோக்கிச் சைகை செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ, சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
