இந்திய கிரிக்கெட் அணியில் மும்பை வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பிசிசிஐ-யின் முன்னாள் தலைமை தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள இந்திய அணி, “இந்திய அணி” போல தெரியவில்லை, மாறாக “மும்பை அணியாகவே” செயல்படுகிறது என்று சாடியுள்ளார்.
K Srikkanth blast on Mumbai Lobby.
– Indian Captain Shreyas Iyer From Mumbai
– Chief Selector Ajit Agarkar from Mumbai
– Shreyas Iyer is the captain of Punjab Kings thats why they picked Suryansh Shedge in the team (another Mumbai player).
This is not the Indian team, this… pic.twitter.com/B1AukfKXPp
— Indian Cricket 🏏 (@navshar54008403) July 13, 2026
அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், தேர்வாளர் அஜித் அகர்க்கர் மற்றும் சமீபத்தில் சேர்க்கப்பட்ட வீரர் சூர்யாஷ் ஷெண்ட்கே என அனைவருமே மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளில் மும்பை லாபியின் ஆதிக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஷிவம் துபேயின் சுமாரான ஃபீல்டிங் மற்றும் அணியின் பந்துவீச்சு கூட்டணியையும் அவர் கடுமையாகக் விமர்சித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சோபிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்.
