இந்தியக் குடும்பங்களில் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை எட்டியதும் அவளது ஒப்புதலின்றித் திருமண ஏற்பாடுகளைச் செய்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தன் தாயின் கட்டாயத் திருமணத் திட்டத்திற்கு எதிராக இளம்பெண் ஒருவர் துணிச்சலாகத் தன் தலைமுடியை முழுமையாக மொட்டையடித்துக் கொண்ட விசித்திரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் கீர்த்தனா மேனன் என்ற பெண், “என் அம்மா என் திருமணத்தைத் திட்டமிட்டார்” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ள அந்த வைரல் வீடியோவில், எவ்விதசலனமுமின்றித் தன் நீண்ட கூந்தலை அவர் முழுமையாக மொட்டையடித்துக் கொள்ளும் காட்சிகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்தச் செயல் நிஜமாகவே கட்டாயத் திருமணத்திற்கு எதிரான ஒரு போராட்டமா, அல்லது ஏதேனும் நேர்த்திக்கடனா என்ற தெளிவான விளக்கம் அதில் இல்லை என்ற போதிலும், “நவீனப் பிரச்சினைகளுக்கு இத்தகைய அதிரடித் தீர்வுகள் தேவைதான்” என்றும், தன் சொந்த வாழ்க்கையின் முடிவைத் துணிச்சலாக எடுக்க நினைக்கும் அந்தப் பெண்ணின் வலுவான மனநிலையைப் பாராட்டியும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
