விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் என்.ஜி.ஓகாலனியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவிக்கும், பார்சல் டெலிவரி செய்ய வந்த மகாராஜா என்ற நபருக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்துள்ளது.

இதனைத் தெரிந்துகொண்ட வெங்கடேசன், தனது மனைவியைக் கண்டித்தபோதிலும் அவர்களது பழக்கம் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு, ஒரு கொரியர் அலுவலகத்திற்குச் சென்று மகாராஜாவை நேரில் சந்தித்து கண்டித்த வெங்கடேசன், வாக்குவாதத்தின் இடையே அங்கிருந்த இரும்பு கம்பியால் அவரைத் தாக்கியுள்ளார்.

தலையில் பலத்த காயமடைந்த மகாராஜா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபரீதக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் நகர் காவல் துறையினர், வெங்கடேசனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.