மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை அரசுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி அரங்கேறிய கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

​மேலும், இந்த விபத்தில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இவற்றுடன் விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு தலா 50,000 ரூபாயும் உடனடியாக வழங்கிடவும், அவர்களுக்குத் தேவையான உயர்தர சிறப்புச் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினருக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவுறுத்தியுள்ளார்.