மனித வாழ்க்கையின் ஆகச்சிறந்த பக்கங்கள் எழுதப்படுவது வகுப்பறைகளின் மர பென்சுகளிலும் கரும்பலகையின் தான்.

ஒரு குழந்தைக்குப் புத்தக அறிவைத் தாண்டி, ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்றுக்கொடுக்கும் அந்தப் புனிதமான இடத்தில், சில நேரங்களில் விதியைத் தலைகீழாக மாற்றி ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் பேரழகான தேவதைகளாகக் குழந்தைகள் மாறிவிடுவதுண்டு. உலகத்தின் எந்தக் கள்ளக்கபடமும் தீண்டாத, மழலைகளின் அந்தத் தூய்மையான நெஞ்சில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள், ஆயிரம் தத்துவப் புத்தகங்களை விடவும் சக்தி வாய்ந்தவை என்பதை நிரூபிக்கும்ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்தான் தற்போது இணையத்தின் இதயத்தை நனைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் பல குழந்தைகள் தங்களின் குட்டி உலகில் மூழ்கி அமர்ந்திருக்க, அந்த நெரிசலான வகுப்பறையில் ஒரு சிறுவன் தன் கைகளில் ஒரு நோட்டுப் புத்தகத்தை ஏந்தி, உலகத்தின் மிக முக்கியமான ஒரு தீர்ப்பை எழுதப் போவது போல கம்பீரமாகத் தன் ஆசிரியரை நோக்கிப் படிவழியே நடந்து வருகிறான். அவனது நோக்கம் மற்ற குழந்தைகளைப் போல வீட்டுப்பாடம் செய்வதிலிருந்து தப்பிப்பதல்ல; மாறாக, தனக்கு இன்னும் எக்ஸ்ட்ரா வீட்டுப்பாடம் வேண்டும் என்று அடம் பிடிப்பது!ஏற்கனவே அன்றைய தினத்திற்கு இரண்டு முறை வீட்டுப்பாடம் கொடுத்துவிட்டதால் புன்னகையோடு மறுக்கும் ஆசிரியர், “இதற்கு மேல் தர முடியாது தம்பி, நீ உன் இடத்திற்குச் செல்” என்று அன்போடு அவனைக் கடந்து முயல்கிறார்.

ஆனால், அந்தப் பிஞ்சு நெஞ்சம் அங்கே தான் ஒரு மாபெரும் பாசப் போராட்டத்தைத் தொடங்கியது. உலகத்தின் எந்தவொரு மேலாண்மைப் பள்ளியிலும் கற்றுத்தர முடியாத ஒரு அசாத்திய தன்னம்பிக்கையோடு, தன் மழலை மொழியைக் கூர்மையாக்கி, “அப்புறம் எதற்காகச் சார் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறீர்கள்? நானும் என் வீட்டுப்பாடத்தைச் செய்யவேண்டுமே!” என்று அந்த ஆசிரியர் முகத்தைப் பார்த்து அவன் கேட்ட அந்த ஒரு நொடி, ஒட்டுமொத்த வகுப்பறையையும் உறைந்து போகச் செய்தது.

ஒரு மழலையின் வாயிலிருந்து வந்த இந்த நியாயமான கேள்வியைக் கேட்டு ஒரு கணம் மௌனமான அந்த ஆசிரியர், தன் சிரிப்பை அடக்க முடியாமல், “கற்பித்தலுக்காக மட்டும் தான்ப்பா பீஸ் வாங்குறோம்” என்று நயமாகக் கூறி அவனது தலையைக் கோதினார்.

 

View this post on Instagram

 

A post shared by Vivek kumar (@vkraj_1999)

“>

இன்ஸ்டாகிராமில் @vkraj_1999என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்ட இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. “இந்தக் குழந்தையின் தைரியமும் அணுகுமுறையும் உலகையே மாற்றும்” என்றும், “முழு கட்டணத்திற்கான நியாயத்தைக் கேட்கும் இந்தச் சிறுவன் நமக்கு இன்னும் தேவை” என்றும் லட்சக்கணக்கான நெட்டிசன்கள் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.