பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 95,000 ரூபாய் மதிப்பிலான சாம்சங் கேலக்ஸி டேப்லெட் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, பார்சலைப் பிரித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்தப் பெட்டிக்குள் புதிய டேப்லெட்டுக்குப் பதிலாக, பழைய மற்றும் கிழிந்த நிலையில் இருந்த ஒரு பொருளாதாரம் புத்தகம் இருந்தது. பிளிப்கார்ட்டின் ‘ஓபன் பாக்ஸ் டெலிவரி’ வசதியைப் பயன்படுத்தி, டெலிவரி ஊழியர் முன்னிலையிலேயே அந்தப் பெட்டியைப் பிரித்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. உடனே அந்தப் பெட்டியை திருப்பி அனுப்ப அவர் முடிவு செய்தார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், ஆர்டர் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாடிக்கையாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Ordered a 95k tablet and flipkart handed me a torn n used economics book 😍😍😍😍
Papa aur mummy dono gand maar rahe meri thank you @Flipkart pic.twitter.com/jVlBhWAfql
— Barca believer (@adityaaa_bhai) July 11, 2026
“>
இருப்பினும், ஆன்லைனில் விலையுயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்யும் போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நம்பிக்கையான இணையதளங்கள் கூட இத்தகைய குளறுபடிகளைச் செய்வது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
