சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான இந்த சம்பவம், ஜோமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவருக்கும், ஒரு வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த உணர்வுப்பூர்வமான உரையாடலை விவரிக்கிறது.
மேலும் மழையோ, வெயிலோ பாராமல் உழைக்கும் டெலிவரி பார்ட்னர்களின் கடின உழைப்பை மதிக்கும் விதமாக, வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டிற்கு வந்த ஜோமேட்டோ ஊழியருக்கு அன்போடு தேநீர் வழங்கி உபசரித்துள்ளார்.
அப்போது அவர், “நான் வேலை செய்யவில்லை என்றால்…” என்று தொடங்கி, தனது குடும்ப சூழ்நிலை மற்றும் அன்றாட பிழைப்பிற்காக தான் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் இணையவாசிகளின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது.
இந்நிலையில் அன்பும் மனிதநேயமும் இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்தும் இந்த உரையாடல், தங்களின் பசியைப் பொருட்படுத்தாது மற்றவர்களின் பசியை ஆற்றும் டெலிவரி ஊழியர்களின் அர்ப்பணிப்பை நெஞ்சாரப் பாராட்ட வைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் எளிய மனிதர்களின் உழைப்பையும் அவர்களின் பின்னால் இருக்கும் குடும்பப் பின்னணியையும் உணர்த்திய இந்த வைரல் பதிவு, சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு, நெட்டிசன்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
