விவசாயி ஒருவர் தனது வறுமையின் காரணமாக தான் வளர்த்து வந்த பசு மாட்டையும், அந்த பிஞ்சு கன்றுக்குட்டியையும் சேர்த்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
மாட்டை வாங்கியவர்கள் அதனை வண்டியில் ஏற்றி தங்களது இடத்திற்கு செல்ல முயன்றனர். மாட்டை விற்றுவிட்டுத் தியாக உணர்வோடும், மன வேதனையோடும் தூரத்தில் பாவமாக நின்று கொண்டிருந்தார் அந்த விவசாயி. அப்போது, தங்களை யாரோ புதிய மனிதர்கள் கூட்டிச் செல்வதையும், வளர்ந்த முதலாளி பிரிந்து நிற்பதையும் உணர்ந்த அந்தப் பசு மாடு, திடீரென அவர்களின் பிடியில் இருந்து விடுபட்டு ஓடி வந்தது.
நேராகத் தூரத்தில் நின்ற தன் முதலாளியான விவசாயியிடம் வந்து, அவரைத் தன் தலையால் முட்டி அணைத்துக் கொண்டு, கால்களைக் கட்டியபடி கண்ணீர் விட்டு அழத் தொடங்கியது. “எங்களை வித்துடாதீங்க” என்று கெஞ்சுவது போல் அந்தப் பசு மாடு செய்த மாஸ் பாசப் போராட்டம், அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.
“Animals don’t use words, but their love speaks louder than anything pic.twitter.com/Cf643no1Rp
— Dharm Sena 🚩 (@Dharmsena_1) July 9, 2026
“>
வாயில்லா ஜீவனின் இந்த அசாத்திய அன்பைக் கண்டு கலங்கிய விவசாயியும், பசுவைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவி பகிரப்பட்டு வருகிறது.
