சாகசம், த்ரில் மற்றும் பயம் ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் அனுபவிக்க நினைப்பவர்களுக்காகவே ஜப்பானில் ஒரு விசித்திரமான உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த ரெஸ்டாரண்ட்டிற்குச் சென்று வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்தால், உணவுடன் சேர்த்து உயிருள்ள நிஜப் பாம்புகளையும் டேபிளிலேயே கொண்டு வந்து வைக்கிறார்கள்.

நாம் சாப்பிடும்போது அந்தப் பாம்புகள் நம் கண்ணெதிரே டேபிளில் நெளிந்து கொண்டிருக்க, மக்கள் பயந்து நடுங்கியபடியே தங்களது உணவைச் சாப்பிட்டு முடிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sarthak Sachdeva (@sarthaksachdevva)

இன்ஸ்டாகிராம் பயனர் சர்தக் சச்தேவ் என்பவர் இந்த வினோத உணவகத்தின் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார், அதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“சாப்பிடும்போது பக்கத்தில் பாம்பைப் பார்த்தால் இருக்கும் பசியே பறந்துவிடும்” என்றும், “இது ஒரு உயிருக்கே ஆபத்தான டேட்டிங் ஸ்பாட்” என்றும் கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜப்பானில் ரோபோக்கள் உணவு பரிமாறுவது, இருட்டில் உணவளிப்பது போன்ற பல விசித்திரமான உணவகங்கள் இருந்தாலும், இது மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய பயமுறுத்தும் அனுபவத்தைத் தருவதற்காகவே பாம்புகள் டேபிளில் வைக்கப்படுவதாக உணவக நிர்வாகம் கூறுகிறது.

இந்த உணவகத்தில் இருக்கும் பாம்புகள் அனைத்தும் பிரத்யேகமாகப் பயிற்சி அளிக்கப்பட்டவை என்றும், அவற்றின் பற்கள் பிடுங்கப்பட்டதால் அவை யாரையும் தாக்காது என்றும் உரிமையாளர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உயிருள்ள பாம்பை அவ்வளவு அருகில் பார்ப்பது எப்பேர்ப்பட்டவர்களையும் நெஞ்சைப் பதற வைக்கிறது. வாடிக்கையாளர்கள் அமர்ந்ததும் உணவோடு சேர்த்து ஒரு கண்ணாடிப் பெட்டியிலோ அல்லது திறந்த வெளியிலோ பாம்புகள் வைக்கப்படுகின்றன.

சாகச விரும்பிகள் பலரும் இதை ரசித்துச் சாப்பிட்டாலும், பாம்புகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு இது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.