சமூக ஊடக உலகமே ஒரு விசித்திரமான இடம்தான். அங்கு எப்போது, என்ன மாதிரியான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், விலங்குகளின் உலகத்திலிருந்து வந்துள்ள ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதுடன் பெரும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘hamar__tenduwa.2’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவின் தொடக்கத்தில், இரு பெரிய காளைகள் நடுரோட்டில் நின்று கொண்டு ஒன்றைக்கொன்று முட்டி மோதி பயங்கரமாகச் சண்டையிட்டுக் கொள்கின்றன.

காளைகளின் அசுர வேகத்தையும் ஆக்ரோஷத்தையும் கண்டு, அந்த வழியாகச் சென்ற பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து தூரத்திலேயே நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by hamar__tenduwa.2 (@hamar__tenduwa.2)

அப்போது, திடீரென அங்கு என்ட்ரி கொடுக்கும் நாய் ஒன்று, சண்டையை நிறுத்துமாறு விளையாட்டின் ‘ரெப்ரி’ (Referee) போல இரண்டு காளைகளுக்கும் நடுவே புகுந்து அங்குமிங்கும் ஓடி சமாதானம் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்கிறது.

ஆனால், காளைகளின் ஆத்திரத்திற்கு முன்னால் அந்த நாயின் பஞ்சாயத்து பலனளிக்கவில்லை. வீடியோவின் கிளைமாக்ஸில், சண்டையை நிறுத்த நாய் மீண்டும் முயலும்போது, எதிர்பாராத விதமாகப் பின்னால் இருந்து மூன்றாவது காளை ஒன்று திடீரெனப் பாய்ந்து வருகிறது.

நிலைமை மோசமாவதை நொடியில் உணர்ந்த அந்த நாய், ‘நமக்கு ஏன் வம்பு, முதலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம்’ என்று உடனடியாக அங்கிருந்து செம வேகத்தில் தெறித்து ஓடுகிறது.