பலருக்கு கார் என்பது வெறும் போக்குவரத்துக்கான வாகனம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு உணர்வுப்பூர்வமான சொத்தாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வெள்ள நீரில் முற்றிலும் மூழ்கியிருக்கும் ஒரு டாட்டா நெக்ஸான் இவி காரின் பின் பகுதியை ஒரு நபர் நெஞ்சளவு தண்ணீரில் நின்றுகொண்டு மிக உறுதியாகப் பிடித்துள்ளார்.

மேலும் கார் தண்ணீரில் மிதந்தபோதிலும், அவர் தனது காரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அதைத் துளிக்கூட கைவிட மறுக்கிறார். பின்னர், அந்தப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், காரை வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்க அந்த நபர் உதவுகிறார்.

“>

இதனால் கார் முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருந்த நிலையிலும், அதன் முகப்பு விளக்குகளும் மற்றும் வைப்பர்களும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது பார்ப்போரை வியப்படையச் செய்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. தனது நான்கு சக்கர வாகனத்தின் மீது அந்த நபர் வைத்திருக்கும் பாசத்தையும், அதை மீட்க அவர் காட்டிய துணிச்சலையும் கண்டு இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், வெள்ளத்தில் சிக்கிய தனது காரைக் காப்பாற்ற அவர் படும் பாட்டைக் கண்டு பலரும் தங்களது அனுதாபங்களை வெளிப்படுத்தி, மனமுடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோவில் உள்ள கார், சுமார் 300 கிமீ மைலேஜ் தரக்கூடிய 2020 மாடல் பழைய டாட்டா நெக்ஸான் இவி கார் என்பது குறிப்பிடத்தக்கது.