ஹரியானா மாநிலத்தில், மாரடைப்பால் உயிருக்குப் போராடிய முதியவர் ஒருவரை, பிரபல டெலிவரி நிறுவனமான பிளிங்கிட் தனது ஆன்லைன் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி உயிர் காத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரபல இன்ஸ்டாகிராம் பக்கப் பயனர் கோமல் கண்டேல்வால் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தங்கள் வீட்டில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸை அழைத்த போது 10,000 முதல் 15,000 ரூபாய் வரை கட்டணம் கேட்டு கொள்ளையடித்ததாகவும் குமுறியுள்ளார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில், பிளிங்கிட் நிறுவனத்தின் இலவச ஆம்புலன்ஸ் சேவை குறித்து அறிந்து உடனடியாக புக் ஆய்வு செய்யப்பட்டது. “அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தாலும், இவ்வளவு மனிதாபிமானம் மிக்க ஒரு 5-ஸ்டார் ஆம்புலன்ஸை அவசர மருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் முழுமையாக அவர்கள் வழங்கியதை என்னால் மறக்க முடியாது; தயவுசெய்து இந்தச் சேவையை எப்போதுமே கட்டணமில்லாமல் தொடருங்கள்” என்று உருக்கமாகப் பேசினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Komal Khandelwal (@stargirl.speaks)

“>

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,விபத்தில் சிக்கிய ராபிடோ டிரைவர் ஒருவரையும் தாங்கள் இதே போல் பிளிங்கிட் ஆம்புலன்ஸ் மூலம் இலவசமாக மீட்டதாக பலரும் பிளிங்கிட் நிறுவனத்திற்கு பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.