சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு குவாரிகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற பிரம்மாண்ட முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து, தற்போதைய தவெக அரசின் கனிமவளத்துறை மிக முக்கியமான “வெள்ளை அறிக்கை” ஒன்றை வெளியிடத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்த அதிரடித் தகவல் தற்பொழுது கோட்டை மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது!

​கடந்த சில ஆட்சிக் காலங்களில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு குவாரிகளில் விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அளவுக்கு அதிகமாகக் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய மற்றும் தீவிர ஆய்வில், கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அக்குவேறு ஆணிவேறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், முறைகேடு செய்த குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட கோடிக்கணக்கான அபராதத் தொகையை, சில முக்கிய அரசியல் புள்ளிகளின் தலையீடு மற்றும் பிரஷர் காரணமாக அதிகாரிகள் வெகுவாகக் குறைத்து, அரசுப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது!

இந்த ஒட்டுமொத்த முறைகேடுகளையும், அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புகளையும் ஆதாரத்துடன் மக்கள் முன்னிலையில் கொண்டு வர, கனிமவளத்துறை தற்பொழுது முழு வீச்சில் இறுதி அறிக்கையைத் தயார் செய்து வருகிறது. இதனால், தவெக அரசின் அடுத்த அதிரடியான வெள்ளை அறிக்கை இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று கோட்டை வட்டாரங்கள் மிகவும் ஓப்பனாகத் தெரிவிக்கின்றன!

​குவாரி முறைகேடுகளை வச்சு தவெக அரசு கையில் எடுத்திருக்கும் இந்த அதிரடி மூவ், கடந்த கால ஆளுங்கட்சிப் புள்ளிகள் மற்றும் முக்கியக் குவாரி அதிபர்கள் மத்தியில் பயங்கர நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிமவளத்துறையின் இந்த மாஸ் ஆக்ஷனால் தமிழக அரசியல் களம் இப்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது!