சிறு சரக்கு வாகனம் ஒன்றில் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாகனத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், முன்பக்கக் கண்ணாடியையும் முழுமையாக மறைத்திருப்பதால், ஓட்டுநருக்குச் சாலை தெரிவதற்கே வாய்ப்பே இல்லாமல் போயுள்ளது.

வாகனம் திரும்பும் திசையை ஓட்டுநருக்குச் சொல்ல, மற்றொரு நபர் வாகனத்தின் கதவின் வெளியே தொங்கிக்கொண்டு சைகை மூலம் வழிகாட்டுகிறார். இத்தகைய பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயலால், அந்த வாகனத்தில் பயணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மதிக்காமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஓவர்லோடு எனப்படும் அதிகப்படியான பாரத்தை ஏற்றுவது வாகனத்தின் சமநிலையைப் பாதிப்பதுடன், திடீர் விபத்துகளுக்கும் வழிவகுக்கும் என்று போக்குவரத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“>

 

ஓட்டுநருக்குச் சாலை தெளிவாகத் தெரியாத நிலையில் வாகனம் இயக்குவது தற்கொலைக்குச் சமம் என்பதால், இத்தகைய வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், சாலை விதிகளை உறுதிப்படுத்த நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.