மளிகைக் கடையில் தனியாக இருந்த பெண்மணிகளிடம் வாலிபர் ஒருவர் வன்முறையில் ஈடுபட முயன்றதும், அங்கிருந்த சிறுவர்கள் ஒன்றுதிரண்டு அவரைத் தாக்கியதுமான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகின்றன.
மேலும் கடையில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அந்த நபர் அத்துமீறவும், தாக்கப் பார்க்கவும் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, பார்ப்பதற்கு 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் போலத் தோற்றமளிக்கும் ஒரு கும்பல், அந்தப் பெண்களின் அலறல் சத்தம் கேட்டு மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளது.
See this Instagram video by @indian__.__memes https://t.co/rXvHhJzMcF
“>
அதோடு சுமார் ஏழு முதல் எட்டு பேர் கொண்ட அந்தச் சிறுவர்கள் கூட்டம், வன்முறையில் ஈடுபட முயன்ற வாலிபரைத் தப்பவிடாமல் மடக்கிப் பிடித்து, தரையில் தள்ளிப் போட்டு மிதித்து துவம்சம் செய்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பிற்கு உடனடியாக ஓடிவந்து, துணிச்சலுடன் அந்த நபரை அடித்துத் துவைத்த சிறுவர்களின் இந்த அதிரடி நடவடிக்கை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரது பாராட்டுகளையும் பெற்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
