பெங்களூருவில் ராபிடோ பைக்-டாக்ஸியில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தின் காரணமாகத் தனது நெஞ்சுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாகவும், “நெஞ்சு வலிக்காமல் என்னால் அழக் கூட முடியவில்லை” என்றும் அவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக ராபிடோ நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் தனக்கு இதுவரை அந்த நிறுவனத்திடமிருந்து எந்தவொரு உறுதியான நிதியுதவியோ அல்லது ஆதரவோ கிடைக்கவில்லை என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விபத்து அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியுள்ள நிலையில், மருத்துவச் செலவுகளுக்கும் அன்றாடத் தேவைகளுக்கும் அவர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் விபத்து நடந்து பல நாட்களாகியும், பைக்-டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பிலும், விபத்துக்குப் பிந்தைய அவசர உதவிகளிலும் காட்டும் அலட்சியப்போக்கை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. ராபிடோ நிறுவனத்தின் இத்தகைய செயல்பாட்டிற்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும், சமூக வலைத்தளவாசசிகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.