டெல்லியில் கள்ளக்காதல் சந்தேகத்தால் 28 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து தனது மனைவி வேறொருவருடன் தொலைபேசியில் பேசுவதாக சந்தேகித்த அந்த நபர், ஆத்திரத்தில் அவரது தலையில் பேட்டரியால் பலமாகத் தாக்கியுள்ளார். இந்த கடுமையான தாக்குதலில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மனைவியைக் கொலை செய்த பின்னர், அந்த நபர் தங்களது சிறு குழந்தையை தனது தாயிடம் கொண்டு போய் விட்டுள்ளார். அதன் பிறகு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கோரச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.