சென்னை: அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கை, இன்னும் 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த குட்கா ஊழல் வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளான எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் இந்த கடுமையான காலக்கெடுவை விதித்துள்ளது.
இந்த அதிரடி உத்தரவின்படி, இன்னும் 3 மாதங்களுக்குள் இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளையும் முடித்து இறுதி கட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கருக்கு சட்டரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்த நீதிமன்ற உத்தரவு, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும், இவரைப் போன்ற முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இப்போ தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
